வங்கதேசத்துக்கு வெற்றிகரமான தோல்வி | Australia vs Bangladesh Worldcup 2019 | Cricket

2019-06-23 213

நாட்டிங்காமில் நடந்த
உலகக் கோப்பை
26வது லீக் ஆட்டத்தில்
ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள்
மோதின.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா,
வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை
துவம்சம் செய்தது.
வார்னர், கேப்டன் ஃபின்ச், கவாஜா
ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால்
ஆஸ்திரேலிய அணி
50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு
381 ரன் குவித்தது.
வார்னர் 166 ரன், கவாஜா 89 ரன்,
ஃபின்ச் 53 ரன் எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவை ஒப்பிடும்போது
பெரியளவில் அனுபவமில்லா
வங்கதேசம் அணி,
பெரிய இலக்கை துணிச்சலுடன் விரட்டியது.
வெற்றிக்காக முடிந்தவரை போராடியது.
50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு
333 ரன் எடுத்து,
48 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
முஷ்ஃபிகர் ரஹீம்
97 பந்துகளில் 102 ரன் எடுத்து
கடைசி வரை போராடியும் பலனில்லை.
மஹ்முதுல்லா 69 ரன்,
தமீம் இக்பால் 62 ரன் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம்
ஆஸ்திரேலிய அணி
10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.